ஸ்பெகடி இன் டொமேடோ சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பெகடி - ஒரு பாக்கெட்

தக்காளி - 4

பூண்டு - 5 பல்

ஆரிகானோ - சிறிது

பட்டர் - ஒரு மேசைகரண்டி

உப்பு - தேவைக்கு

ஆலிவ் ஆயில் - சிறிது

மொசிரில்லா சீஸ் - துருவியது

செய்முறை:

முதலில் ஸ்பெகடியை சிறிது உப்புடன் வேகவைத்து வடித்துக் கொள்ளவும்.

தக்காளியை கீறி வேக வைத்து தோலுரித்து பின் நன்கு ப்யுரியாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் பட்டர் மற்றும் ஆயிலை சேர்த்து சூடானதும் பூண்டை நறுக்கி போட்டு வதக்கி பின் ஆரிகோனாவையும் தக்காளி ப்யுரியையும் சேர்த்து பட்டர் வெளியே வரும் வரை கிளறி ஸ்பெகடியை சேர்த்து கலக்கவும்.

பின் சீஸ் துருவலை தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: