ஸ்பினாச் றோல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பைலோ ஷீட்/பேஸ்ரி ஷீட் - 1 பாக்கட்

ஸ்பினாச் - 1 - 11/2 கட்டு

பட்டர் /ஒலிவ் எண்ணெய்- 5 மேசைக்கரண்டி

வெட்டிய வெங்காயம் - 1/4 கப்

கிறீம் சீஸ்/மொற்ஸரில்லா சீஸ் - 1/4 கப்

உப்பு

மிளகுதூள்

செய்முறை:

அவனை 375 Fஇல் முற்சூடு பண்ணவும்.

ஸ்பினாச்சை சுத்தப்படுத்தி ஆவியில் அவித்து தண்னீரை ஒற்றி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி பட்டரை போட்டு உருக விடவும்.

அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுள் ஸ்பினாச்சை போட்டு 1 நிமிடம் கிளறி இறக்கவும்.

பின்னர் ஒரு Food processorஇல் அல்லது மிக்ஸியில் ஸ்பினாச் கலவை, சீஸ், உப்பு, மிளகு தூள் போட்டு அடிக்கவும்.

பைலோ ஷீட்டை விரித்து அதன் மேல் ஒரு மேசைக்கரண்டி பட்டர்/எண்ணெய்யை பூசி அதன் மேல் ஸ்பினாச் கலவையை சீராக பரப்பவும்.

பின்னர் ஒரு கரையிலிருந்து றோல் போல இறுக்கமாக உருட்டவும்.

பின்னர் குறுக்கே 1 அங்குல தடிப்பில் வட்ட துண்டுகளாக வெட்டி பட்டர் பூசிய பேக்கிங் தட்டில் இடைவெளி விட்டு அடுக்கவும்.

துண்டுகள் மேல் மீதி பட்டரை உருக்கி ஒரு பிரஷால் பூசவும்.

பின்னர் அவனில் வைத்து 20 நிமிடங்கள் அல்லதி லேசான பிரவுண் நிறம் வரும் வரை பேக் செய்யவும்.

சுவையான ஸ்பினாச் றோல் தயார்.

குறிப்புகள்:

ஸ்பினாச்சுடன் வெட்டிய வால்நட்/ பெக்கான் நட்/பாதாமும் சேர்க்கலாம்.