ஸ்பினாக் கீரைக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஸ்பினாக் இலைகள் - 250 கிராம் புரோக்கோலி -100 கிராம் பூண்டு - 3 பற்கள் பால் - 75 மி.லி தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி தேசிக்காய் - 2 தேக்கரண்டி தாளிப்பதற்கு: வெங்காயம் - 50 கிராம் செத்தல் மிளகாய் - 3 கடுகு - அரை தேக்கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு

செய்முறை:

புரோக்கோலி மற்றும் ஸ்பினாக் கீரை இலைகளைக் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

கீரைக்கறி செய்ய தேவையான மற்ற அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புரோக்கோலியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

அதன்மேல் ஸ்பினாக் இலைகளை நறுக்கிப் போட்டு

பூண்டையும் தோல் நீக்கி அதில் போடவும்.

அதனுடன் சிறிதளவு தண்ணீர்(25ml) ஊற்றி மூடி

மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

நன்கு வெந்ததும் கீழே இறக்கி வைத்து கீரை மசிக்கும் கரண்டியால் நன்கு மசித்து விடவும்.

நன்கு மசிந்ததும்

பால்

தேங்காய்ப்பூ

உப்பு சேர்த்துப் பிரட்டி

மீண்டும் அடுப்பில் வைத்து

சூடானதும் இறக்கி விடவும்.

வெங்காயம்

பூண்டு

மிளகாய்வற்றல் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து கீரைக்கறியின் மேல் கொட்டி அதில் தேசிக்காய் பிழிந்து பிரட்டி விடவும்.

சுவையான சத்தான கீரைக்கறி தயார். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: