ஸ்பானிஷ் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சம்பா அரிசி / பாஸ்மதி அரிசி - 500 கிராம் சிக்கன் - 750 கிராம் வெங்காயம் - 250 கிராம் உருளைக்கிழங்கு - 250 கிராம் தக்காளி - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 இஞ்சி

பூண்டு விழுது - 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி மிளகாய் தூள் - 2 + 2 தேக்கரண்டி சோயா சாஸ் - 2 + ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்க

செய்முறை:

சிக்கனுடன் இஞ்சி

பூண்டு விழுது

மஞ்சள் தூள்

2 தேக்கரண்டி மிளகாய் தூள்

2 மேசைக்கரண்டி சோயா சாஸ் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்

தக்காளியை வெந்நீரில் போட்டு வைத்தெடுத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

ஊறிய சிக்கனை அரை பதமாக வேக வைத்து தண்ணீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கை பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவும். சிக்கனையும் பொரித்து எலும்புகளை நீக்கி சிறு துண்டுகளாக உதிர்த்துக் கொள்ளவும்.

அரிசியைக் களைந்து ரைஸ் குக்கர் அல்லது ப்ரஷர் குக்கரில் போட்டு சிக்கன் வேக வைத்த தண்ணீரை ஊற்றி

மேலும் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றவும். அதனுடன் மீதி மிளகாய் தூள்

சோயா சாஸ்

தக்காளி

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து சாதத்தை தயார் செய்து கொள்ளவும்.

பிறகு சாதத்தை ஒரு அகலமான பவுலில் போட்டு சற்று ஆறியதும்

பொரித்து வைத்துள்ள சிக்கன்

உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

டேஸ்டி ஸ்பானிஷ் ரைஸ் தயார். தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை. விரும்பினால் தயிர் பச்சடி சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்புகள்: