ஸ்ட்ராபெர்ரி சாஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி - மூன்று கோப்பை

ராஸ் பெர்ரி - ஒரு கோப்பை

ஆப்பிள் ஜூஸ் - ஒரு கோப்பை

எலுமிச்சைசாறு - இரண்டு தேக்கரண்டி

சர்க்கரை - நான்கு மேசைக்கரண்டி

கார்ன் ஸ்ரார்ச் - நான்கு தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ஆப்பிள்ஜூஸை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.அதில் நறுக்கிய பழங்களைப் போட்டு வேகவிடவும். அடுப்பின் அனலை குறைவாக வைக்கவும்.

பிறகு கார்ன் ஸ்டார்ச்சை இரண்டு மேசைக்கரண்டி நீரில் கரைத்து பழகலவையில் ஊற்றி கொதிக்க விடவும்.

சாஸ் கெட்டியானவுடன் எலுமிச்சைசாறு, மற்றும் சர்க்கரைய்யைப் போட்டு கரைத்து சாஸ் நீர்த்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

இந்த சுவையான சாஸ்ஸை பேன் கேக், சீஸ் கேக், மற்றும் பிடித்தமான எல்லா இனிப்புகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

குறிப்புகள்: