ஸ்டிர்ஃபிரைட் நூடுல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரைஸ் நூடுல்ஸ் - கால்கிலோ பாக்கெட்

சிக்கன் - ஒரு கோப்பை

பூண்டு - இரண்டு பற்கள்

கேரட் - இரண்டு

கேபேஜ் - இரண்டு கோப்பை

முட்டை - இரண்டு

முலைவிட்ட பச்சைபயிறு - அரைக்கோப்பை

வெங்காயத்தாள் - நான்கு

கொத்தமல்லி - கால் கோப்பை

கார்ன் ஆயில் - நான்கு தேக்கரண்டி

உப்புத்தூள் - கால் தேக்கரண்டி

சாஸ் தயாரிக்க தேவையானவை:

சோயாசாஸ் - கால் கோப்பை

மீன் சாஸ் - கால் கோப்பை

சில்லிசாஸ் - இரண்டு மேசைக்கரண்டி

சர்க்கரை - இரண்டு மேசைக்கரண்டி

சோளமாவு - மூன்று தேக்கரண்டி

சில்லிஃபிளேக்ஸ் - அரைதேக்கரண்டி

செய்முறை:

முதலில் சாஸ் செய்ய தேவையானப் பொருட்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கால்கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

கேரட், கேபேஜை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கி வைக்கவும்.

வெங்காயத்தாளை இரண்டங்குல நீளத்திற்கு மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

சிக்கனை எலும்புகள் இல்லாமல் சுத்தம் செய்துவைக்கவும்.

நூடுல்ஸை மிதமான சுடுதண்ணீரில் போட்டு பத்து நிமிடம் கழித்து நீரை வடிகட்டி வைக்கவும்.

ஒரு அகன்ற சட்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு வேகவைத்து உதிர்த்து அதனுடன் வெங்காயத்தாளையும், முளைவிட்ட பச்சைபயிரையும் சேர்த்து வதக்கி ஒரு தட்டில் எடுத்துவைக்கவும்.

பிறகு அதே சட்டியில் மூன்று தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி முதலில் பூண்டைப் போட்டு வதக்கி தொடர்ந்து சிக்கனைப் போட்டு உப்பைச் சேர்த்து சிக்கன் வேகும்வரை நன்கு வதக்கவும்.

பிறகு கேரட்டையும், கேபேஜியையும் போட்டு வதக்கி நூடுல்ஸ்ஸைப் போட்டு கிளறவும்.

பிறகு தயாரித்து வைத்துள்ள சாஸை ஊற்றி கிளறி விட்டு முட்டை கலவையைப் போட்டு நன்கு கிளறிவிட்டு இறக்கி விடவும்.

பின்பு கொத்தமல்லியைத் தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: