ஸ்டஃப்டு மிர்சி பஜ்ஜி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் - 4 கடலை மாவு - ஒரு கப் மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி அரிசி மாவு - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவைக்கு எண்ணெய் - தாளிக்க ஸ்டஃப் செய்ய : உருளைக்கிழங்கு - 2 பெரிய வெங்காயம் - பாதி பச்சை மிளகாய் - ஒன்று இஞ்சி - ஒரு வில்லை கறிவேப்பிலை

மல்லித் தழை - சிறிது புளி - நெல்லி அளவு சர்க்கரை - தேவைக்கு

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பிற பொருட்களை நறுக்கிக் கொள்ளவும். கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும். சர்க்கரையை புளியுடன் சேர்த்து நீர் ஊற்றி குழைத்துக் கொள்ளவும்.

பொடி வகைகளை ஒன்றாக சேர்த்து தேவையான நீர் ஊற்றி கட்டியில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.

ஸ்ஃடப் செய்ய தேவையான பொருட்களை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

மிளகாயை ஒருபுறம் மட்டும் கீறி உள்ளே கிழங்கு கலவையை நன்கு ஸ்டப் செய்துக் கொள்ளவும்.

அதை மாவு கலவையில் நன்கு தோய்த்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும்

மிளகாயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

மாலை நேர காபி டீக்கு ஏற்ற சுவையான பஜ்ஜி ரெடி

குறிப்புகள்: