ஸ்குஃப்டு மெலன் சாலட் (Scooped Melon Salad)
தேவையான பொருட்கள்:
ஐஸ் க்ரீம் ஸ்குப்(Ice Cream Scoop) - சிறிய சைஸ்(Small Size Scooper)
தர்பூசணி (Watermelon) - 1
கிர்னி பழம் (Cantaloupe) - 1
சர்க்கரை தண்ணீர் - 1 கப்
புதினா - சிறிதளவு
எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
செய்முறை:
சர்க்கரை தண்ணீர் என்பது 1 கப் சர்க்கரையினை 1/2 - 1 கப் தண்ணீரில் சேர்த்து கொதிவிட்டது.(பாகு வரும் முன்பே எடுத்து விடவும்).
தர்பூசிணி மற்றும் கிர்னி பழத்தினை ஐஸ்க்ரீம் ஸ்குப்பரினை வைத்து ஐஸ்க்ரீமினை ஸ்குப் செய்வது போல பழத்தினை ஸ்குப் செய்யவும். ( இப்படி ஸ்குப் செய்வதால் நமக்கு சிறிய சிறிய உருண்டைகளாக பழம் கிடைக்கும்).
புதினாவினை மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
சர்க்கரை தண்ணீர், புதினா மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாக கலக்கி ஸ்குப் செய்துள்ள பழத்தின் மீது ஊற்றி பரிமாறவும்.
இப்பொழுது மெலன் சாலட் ரெடி. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.