ஸ்கிராம்பில்ட் எக்ஸ்
0
தேவையான பொருட்கள்:
முட்டை - நான்கு
வெங்காயம் - ஒன்று
சிவப்பு குடமிளகாய் - ஒன்று
கிரீம் சீஸ் - கால்க்கோப்பை
உப்புத்தூள் - அரைத்தேக்கரண்டி
மிளகுத்தூள் - அரைத்தேக்கரண்டி
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
சைவ்ஸ் இலை - இரண்டு தேக்கரண்டி
பார்ஸ்லி இலை - இரண்டு தேக்கரண்டி
செய்முறை:
முட்டை, கிரீம் சீஸை ஒன்றாக போட்டு நன்கு அடித்து வைக்கவும்.
நான்ஸ்டிக் பேனில் வெண்ணெய்யை உறுக்கி வெங்காயம் மற்றும் சிவப்பு குடமிளகாய்யைப் போட்டு வதக்கவும்.
பின்பு முட்டைக்கலவைய்யை ஊற்றி நன்கு கலக்கி விடவும். முட்டை நன்கு வேகும் வரை கிளறி விட்டு உப்பையும் மிளகையும் போட்டு கலக்கிவிட்டு இறக்கி விடவும்.
நறுக்கிய சைவ்ஸ் மற்றும் பார்ஸ்லி இலையை தூவி டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளுடன் சூடாக பரிமாறவும்.
சுவைய்யான சத்து நிறந்த இந்த உணவை காலை நேர உணவாக பரிமாறலாம்.