ஸலாத்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் -2

வெள்ளரிக்காய் -1

கேரட் -1

முள்ளங்கி -1

தக்காளி-2

பச்சை மிளகாய்-2

மாங்காய் -1/2 துண்டு

கொத்தமல்லி- சிறிதளவு

எலுமிச்சை-1

உப்பு-தேவைக்கு

சாட் மசாலா- சிறிதளவு

சீரகம்- சிறிதளவு (கரகரப்பாக பொடித்தது)

செய்முறை:

மாங்காய் தவிர கொடுத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் வட்டமாக (ஆனால் மெலியதாக) நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு தட்டில் கற்பனைக்கு ஏற்ப வரிசையாக,அழகாக அடுக்கவும்.

அதில் மாங்காயை துருவவும்.

பொடியாய் நறுக்கிய பச்சைமிளகாயையும், கொத்த மல்லியையும் அதன் மேல் தூவவும்.

எலுமிச்சை சாறில் உப்பு கலந்து அடுக்கிய எல்லா காய்களின் மேலும் படும்படி ஊற்றவும்.

பின்னர் சீரகம் மற்றும் சாட் மசாலா தூவி 1/2 மணி நேரத்திற்கு பின் பரிமாறலாம்.

குறிப்புகள்:

வடமாநிலங்களில் ஒவ்வொரு விருந்திலும் கண்டிப்பாக இது இடம்பெறும். ரைத்தாவிற்கு பதில் இதை செய்யலாம்.