ஷீர் குர்மா
தேவையான பொருட்கள்:
பால் - அரை லிட்டர்
முந்திரி - ஐம்பது கிராம்
பொடி சேமியா - கால் டம்ளர்
சர்க்கரை - அரை டம்ளர் (அ) தேவைக்கு
கன்டென்ஸ்ட் மில்க் டின் - ஒரு சிறிய டின்(90 கிராம்)
ஏலக்காய் - இரண்டு
நெய் - மூன்று தேக்கரண்டி
முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட், கிஸ்மிஸ் பழம் - தலா நான்கு
செய்முறை:
பாலை ஏலக்காய் சேர்த்து காய்ச்சவும்.
ஐம்பது கிராம் முந்திரியை அரைத்து ஊற்றி மீண்டும் காய்ச்சவும்.
பிறகு சர்க்கரை, கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து அடியில் ஒட்டாமல் காய்ச்சி இறக்கும் நேரத்தில் சேமியாவை கையால் நல்ல பொடித்து இரண்டு தேக்கரண்டி நெய்யில் வறுத்து போட்டு கிளறவும்.
மூன்று நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும். பால் சூட்டில் வேறு நல்ல வேகும்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் பொடியாக நறுக்கி, கிஸ்மிஸ் பழம் அனைத்தையும் ஒரு தேக்கரண்டி நெய்யில் கருகாமல் வறுத்து சேர்க்கவும்.
குறிப்புகள்:
இது இஸ்லாமிய இல்லங்களில் ஈத் பெருநாளின் போது செய்வார்கள். சாதாரண விஷேசங்களுக்கும் செய்யலாம். பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் இதை அதிகமாக செய்வார்கள்.
தேவைப்பட்டால் முந்திரியுடன் பாதாம், அக்ரூட்டையும் சேர்த்து அரைத்து கொண்டு, கடைசியில் முந்திரி, பிஸ்தா, கிஸ்மிஸ் மட்டும் கூட நெய்யில் வறுத்து போடலாம். நிறைய ஆட்கள் என்றால் தேவைக்கு அளவை கூட்டிக்கொள்ளவும்.