ஷீக் கபாப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கொத்திய ஆட்டு இறைச்சி - அரைகிலோ

நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்

நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1 டேபிள் ஸ்பூன் கட் செய்தது

முந்திரிப்பருப்பு பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

கடலைமாவு அல்லது கார்ன் மாவு - 2 டீஸ்பூன்

சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்

பெருஞ்சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (கட் செய்தது)

மல்லி,புதினா,மேதி இலை - தலா 1 டேபிள்ஸ்பூன்

பப்ரிகா பவுடர் - கால் - அரைஸ்பூன்

உப்பு - தேவைக்கு

முட்டை வெள்ளைக்கரு - 1

செய்முறை:

கறியை சுத்தம் செய்த்து நீர் வடிகட்டி முட்டை தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் சுற்றிக்கொள்ளவும்.

தயார் செய்ததை ஃப்ரிஜ்ஜில் அரைமணி நேரம் வைக்கவும்.

பின்பு அரைமணி கழித்து முட்டை வெள்ளைகருவை கறிக்கலவையுடன் சேர்த்து திரும்ப அரை மணி நேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து எடுக்கவும்.

பின்பு கறிக்கலவையை 12 அளவாக பிரித்து கொள்ளவும்.

ஒவ்வொரு அளவை எடுத்து தண்ணீர் தொட்டுகொண்டு கபாப் கம்பியில் (skewer)நீள் உருளையாக பிடித்து வைக்கவும்.

இப்படி தயார் செய்தவைகளை சார்கோல் அடுப்பில் வைத்து அல்லது கிரில் செய்து எடுக்கவும்.

சுவையான ஷீக் கபாப் ரெடி. இதனை சூடாக க்ரீன் சட்னியுடன் (மிண்ட் சட்னி)பரிமாறவும்.

குறிப்புகள்:

பப்ரிகா பவுடர் சேர்ப்பதினால் இறைச்சி விரைவாக வெந்து விடவும், மெதுவாகவும் செய்ய உதவுகிறது.