ஷி ஃபுட் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இறால் சிறியது - 100 கிராம்

ஸ்குயிட் - 100 கிராம்

அமூர் - 100 கிராம்

லைம் ஜூஸ் -1 டீஸ்பூன்

மைதா - 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு பல் - 4(தட்டிக்கொள்ளவும்)(பூண்டு பிடிக்காதவர்கள் தவிர்க்கவும்)

பட்டர் அல்லது மார்கரைன் - 2 டீஸ்பூன்

ஒயிட் பெப்பர் - 1 அல்லது 2 டீஸ்பூன்

சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

வினிகர் - 2 டீஸ்பூன்(1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போட்டு வைக்கவும்)

டொமடோ சாஸ் - கொஞ்சம்.

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மீனை சுத்தம் செய்து கழுவி, ஒரு ஸ்பூன் லைம் ஜூஸ், உப்பு சிறிது கலந்து எடுத்து வைக்கவும்.

ஒரு நாண் ஸ்டிக் பானில் பட்டர் அல்லது மார்கரைன் போட்டு,தட்டிய பூண்டு போட்டு வதக்கி, மைதா மாவு சேர்த்து வதக்கி பின்பு ஒரு லிட்டர் தண்ணீர் சேர்க்கவும். கட்டிப்பிடிக்காமல் மரக்கரண்டி வைத்து கிளறவும். கொதி வந்தவுடன் மீனைப்போட்டு சிம்மில் வைத்து கால் மணி நேரம் வேகவிடவும்.

பின்பு சோயா சாஸ் சேர்க்கவும். ஓயிட் பெப்பர் சேர்க்கவும், உப்பு ருசிக்கு தகுந்தவாறு சேர்க்கவும்.

ஷி ஃபுட் சூப் ரெடி.

இதனை வினிகரில் ஊறிய பச்சை மிளகாய், டொமேட்டோ சாஸ் உடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

ஃபிஷ் மார்க்கட் போகும் போது நாம் வெரைட்டியாக மீன் வாங்கினால் இந்த ஷி ஃபுட் சூப் செய்யலாம். முள் இல்லாத மீனாக இருக்கவேண்டும். அவரவர் டேஸ்ட் தகுந்தபடி மீன் செலக்ட் பண்ணிக்கொள்ளலாம். நண்டு கூட வேகவைத்து உடைத்து போடலாம். மீன் அளவை வேண்டுமானால் குறைத்தும் சூப் செய்யலாம். தண்ணீர் கொஞ்சம் கூட சேர்த்தால் மைதா மாவும் அதிகரிக்க வேண்டும்.