ஷஷுவன் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 2 கப் காரட்

பீன்ஸ்

குடை மிளகாய்

காலிஃப்ளவர்

காளான்

ஸ்வீட் கார்ன்

செலரி - தலா 2 மேசைக்கரண்டி வெங்காயம் - ஒன்று பூண்டு - 3 பல் ஸ்ப்ரிங் ஆனியன் - 2 மேசைக்கரண்டி சில்லி சாஸ் - அரை மேசைக்கரண்டி சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி வினிகர் - ஒரு மேசைக்கரண்டி தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி புளி பேஸ்ட் - கால் தேக்கரண்டி சில்லி கார்லிக் சாஸ் - அரை மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை கழுவி ஊற வைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைக்கவும்.

எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும்.

பூண்டு பொன்னிறமானதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் செலரி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிவந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் ஓரளவுக்கு வெந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும்.

அரிசியில் உள்ள தண்ணீர் வற்றியதும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

தண்ணீர் சுத்தமாக வற்றியவுடன் எல்லா சாஸும் சேர்த்து வதக்கவும்.

சாஸ் சேர்த்தவுடன் தீயை கூட்டி வைத்து வதக்கவும். ஐந்து நிமிடம் வதக்கி வெங்காய தாள் சேர்த்து இறக்கவும். சூடாக மஞ்சூரியனுடன் பரிமாறவும். சுவையான ஷஷுவன் ஃப்ரைட் ரைஸ் ரெடி!

குறிப்புகள்: