வேப்பம்பூ வடகம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காய வைத்த வேப்பம்பூ - 3 கப்

உளுந்து - 1 கப்

மிளகு - 1 தேக்கரண்டி

பெரிய சீரகம் - 1 மேசைக்கரண்டி

சிறிய சீரகம் - 1 மேசைக்கரண்டி

வெட்டிய வெங்காயம் - 1/2 கப்

கறிவேப்பிலை - 2 - 3 நெட்டு

மிளகாய் பிளேக்ஸ் - 2 மேசைக்கரண்டி

உப்பு

செய்முறை:

மிளகு, பெரிய, சிறிய சீரகங்களை பொடித்து கொள்ளவும்

உழுந்தை 5- 6 மணித்தியாலங்கள் ஊற வைத்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த உளுந்தினுள் காய்ந்த வேப்பம் பூ மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாது இறுக்கமாக குழைக்கவும்.

பின்னர் அதனை நெல்லிக்காயளவு உருண்டைகளாக உருட்டி சிறிது வடை போல தட்டையாக்கி சுத்தமான காய்ந்த ஒரு துணியில் (பொதுவாக தாத்தாவின் பழைய வேட்டி) அடுக்கி வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.

வேப்பம்பூ வடகம் தயார். இதனை ஒரு சுத்தமான் காய்ந்த போத்தல் அல்லது டப்பாவினுள் போட்டு தேவையான போது எடுத்து எண்ணெயில் பொரித்து சோறு புட்டு போன்றவற்றுடன் சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

இதற்கு வெங்காயத்தை நல்ல குறுணலாக வெட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் வைத்து பாவிக்கலாம். பழுதாகாது. சுவையானது. வேப்பம் பூ ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதே முறையில் பாவற்காய், முருங்கைக்காய், வாழைப்பூ கொண்டும் வடகம் செய்யலாம்.