வெள்ளரிக்காய் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய வெள்ளரிக்காய் - 4

தயிர் - 2 கப்

பச்சைமிளகாய் (வெட்டிய) - 4

கறிவேப்பிலை - சிறிதளவு (வெட்டிய)

உப்பு - தேவையானளவு

எண்ணெய் - தேவையான அளவு

வெங்காயம் - ஒரு (வெட்டிய)

செய்முறை:

வெள்ளரிக்காயைத் துருவி உப்பு சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். சிறிது நேரத்தின் பின்பு தண்ணீர் வடியும் (பிரியும்) அதை வடித்து விடவும்.

பின்பு வெள்ளரிகாயுடன் தயிர், கறிவேப்பிலை சேர்க்கவும். கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் தாளித்து போடவும். இதோ வெள்ளரிக்காய் சாலட் தயாராகி விட்டது.

குறிப்புகள்:

உடல் சூட்டை தணிக்கும் சாலட். சாலட் செய்த சில மணி நேரத்தில் உண்ண வேண்டும் இல்லாவிட்டால் அது பழுதடைந்துவிடும்.