வெள்ளரிக்காய் ஊறுகாய் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சோயா ஸாஸ் - 4 டேபிள் ஸ்பூன்

வினிகர் - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 1டேபிள் ஸ்பூன்

வெள்ளரிக்காய் - 3

உப்பு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெள்ளரிகாயை கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில், சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின் வெள்ளரி துண்டுகளின் மேல் உப்பை தூவி முப்பது நிமிடம் ஊற வைக்கவும்.

இதற்கிடையில் சோயா சாஸ், வினிகர், சர்க்கரை இவைகளை ஒன்றாக கலந்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ரெடியாக வைக்கவும்.

முப்பது நிமிடம் கழித்து வெள்ளரிதுண்டுகளை உப்பு போக கழுவி விடவும்.

பின் கழுவிய வெள்ளரிதுண்டுகளை ரெடியாக வைத்திருக்கும் கரைசலில் சேர்க்கவும்.

இதனை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பின் எடுத்து உபயோகிக்கலாம்.

குறிப்புகள்:

வெள்ளரிக்காய் தீர்ந்தவுடன் மீண்டும் அதே கரைசலில் புதிய வெள்ளரிதுண்டுகளை மேற்கூறியபடி தயாரித்து சேர்த்துகொள்ளலாம்.