வெண்டைக்காய் வெள்ளைக்கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 300 கிராம் வெங்காயம் - 20 கிராம் பூண்டு - 2 பல் வெந்தயம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி எலுமிச்சம்புளி - 2 மேசைக்கரண்டி பால் - 75 மில்லி உப்பு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வெங்காயத்தையும் பூண்டையும் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெண்டைக்காயை கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு புளி சேர்த்து பிரட்டவும்.

வெண்டைக்காயுடன் நறுக்கின வெங்காயம்

பூண்டு மற்றும் வெந்தயம் சேர்த்து பிரட்டவும்.

அதன் பின்னர் உப்பு போட்டு 100 மி.லி தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.

எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் திறந்து மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து கொதிக்க விடவும்.

பாலுடன் சேர்ந்து வெண்டைக்காய் கலவை நன்கு கொதித்ததும் இறக்கவும்.

சுவையான வெண்டைக்காய் வெள்ளைக்கறி தயார். இது குழந்தைகளுக்காக மிளகாய் சேர்க்காமல் செய்தது. பெரியவர்களுக்காக இருந்தால் 3 பச்சை மிளகாய் சேர்த்துக் செய்யலாம். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

குறிப்புகள்: