வெண்டைக்காய் வறுவல்
0
தேவையான பொருட்கள்:
வெண்டைக்காய் - 200 கிராம் (குருனிவட்டமாக நறுக்கியது)
வெங்காயம் - ஒன்று (நறுக்கியது)
மிளகாய்தூள் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், நறுக்கிய வெங்காயம் தாளித்து
பின்பு குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய் போட்டு வதக்கவும்.
பின்பு மிளகாய்தூள் போட்டு வதக்கிய பின் முட்டை, உப்பு சேர்த்து வதக்கவும்
தேசிக்காய் சாறு (லெமன் ஜுஸ்) சேர்க்கவும். 2 நிமிடங்களின் பின்பு சுவையான வெண்டைக்காய் வறுவல் தயார்.
குறிப்புகள்:
சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கு இது உதவும். கவனிக்க வேண்டிய விஷயங்கள்-(1)குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய் (2)எண்ணெயில் வெண்டைக்காய் போட்டு வதக்கவும்