வெண்டைக்காய் பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/4 ல்ப்

கடலை மா - 3 மேசைக்கரண்டி

அரிசிமா - 1 மேசைக்கரண்டி

உப்பு

கறித்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை:

வெண்டைக்காயை சுடு தண்ணீரில் சுத்தப்படுத்தி 1/2" துண்டுகளாக வெட்டவும்.

கடலைமா, அரிசிமா, உப்பு, கறித்தூள் சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தைவிட சிறிது நீர்க்க குழைக்கவும்.

பின்னர் இதனுள் வெட்டிய வெண்டைக்காய்களை போட்டு கலக்கவும்.

ஒர் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி அதனுள் மாவுடன் கலந்த வெண்டைக்காய்களை தனித்தனியே போட்டு சிவக்க பொரித்து எடுத்து ஒரு பேப்பரில் போடவும்.

சுவையான வெண்டைக்காய் பொரியல் தயார். இதனை சுடு சோற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

இதற்கு முற்றல் வெண்ண்டைக்காயை பாவிக்கலாம்.