வெஜ் டெம்புரா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேட்டர் செய்ய:

மைதா- 1கப்

கார்ன் மாவு- 1/4கப்

ப்ளெயின் சோடா- தேவையான அளவு

ஐஸ் க்யூப்ஸ்- 4 அல்லது 5

உப்பு- தேவையான அளவு

டெம்புரா செய்ய:

குடை மிளகாய்

கேரட்

பீன்ஸ்

வெங்காயம்

எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு

டிப்பிங் சாஸ் செய்ய:

சோயா சாஸ்- 2 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய்- 3

செய்முறை:

குடை மிளகாயை சற்று பெரிய சதுரங்களாகவும் கேரட்டை பஜ்ஜிக்கு வெட்டுவது போலவும் வெங்காயத்தை வட்ட ஸ்லைஸ்களாகவும் பீன்ஸை நார் நீக்கியும் தயாராக வைக்கவும்.

பேட்டர் செய்ய கொடுத்துள்ளவற்றை எல்லாம் கலந்து அதிகம் அடிக்காமல் பஜ்ஜி மாவை விட சற்று நீர்க்க கலக்கி வைக்கவும்.

எண்ணெய் காய வைத்து காய்கறிகளை மாவில் முக்கி பொரித்தெடுக்கவும்.

சோயா சாஸுடன் பொடியாக வெட்டிய பச்சை மிளகாய் கலந்து டிப்பிங் சாஸ் ஆக டெம்புராவுடன் சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்:

இறாலையும் இதே போல் டெம்பூரா செய்யலாம்.