வெஜ் சீஸ் நேச்சோஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நேச்சோஸ் - ஒரு பாக்கெட் சீஸ் ஸ்லைஸ் - 4 சிறிய வெள்ளரி - பாதியளவு பல்லாரி - சிறிதளவு தக்காளி - சிறிதளவு நீளமான குடை மிளகாய் - பாதியளவு

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளி

பல்லாரி

குடைமிளகாய்

வெள்ளரி அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

நேச்சோஸ் பாக்கெட்டை பிரித்து ஒரு பீங்கான் தட்டில் சிப்ஸ் அனைத்தையும் பரத்தி வைக்கவும். சிப்ஸ் மேல் நறுக்கிய பொருட்கள் அனைத்தையும் தூவி மைக்ரோவேவ் அவனில் 2 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

அதில் சீஸ் ஸ்லைஸ் மேலே வைத்து 30 நொடிகள் மீண்டும் அவனில் வைத்து எடுக்கவும். சுவையான வெஜிடபிள் சீஸ் நேச்சோஸ் தயார். சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: