வெஜ் கேசடீயா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வீட் அல்லது கார்ன் ரோர்டியா - 4 (Wheat/Corn tortilla)

துருவிய கரட் - 1/2 கப்

ஊறவைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்

வெட்டிய வெங்காயம் - 1/4 கப்

உள்ளி- 3 பல்லு

பச்சை மிளகாய்

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு

எலுமிச்சை - பாதி

சீஸ் கலவை - 1 கப்

(பார்மஜான், மொற்சரில்லா, செடார்)

எண்ணெய்

செய்முறை:

கொண்டைக்கடலையை உப்பு போட்டு அவித்து வைக்கவும்.

உள்ளியை நசித்து வைக்கவும்.

பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக நறுக்கி உப்பு தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும்.

ரோர்டியாவை தோசைகல்லில் இரு பக்கமும் சுட்டு எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

பின்னர் உப்பு, உள்ளி, மிளகாய்தூள், கரட், கொண்டைக்கடலை சேர்த்து வதக்கவும்.

கலவை நன்கு சேர்ந்ததும் இறக்கவும்.

பின்னர் சுட வைத்த ரோர்டியாவை ஒவ்வொன்றாக எடுத்து அதன் அரைவாசியில் வதக்கிய கலவையை பரப்பி சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.

பின் அதன் மேலே துருவிய சீஸ் கலவையை பரப்பி சிறிது உப்பு தூவவும்.

பின் அதன் மேல் சிறிது பச்சை மிளகாயை தூவி மறு பாதியால் மூடவும்.

மூடிய ரோர்டியாவின் மேற்புறத்தில் ஒரு பிரஷால் சிறிது எண்ணெய் தடவி சிறிது உப்பு தூவவும்.

தோசைக்கல்லை சூடாக்கி இதனை திரும்பவும் இரு பக்கமும் திருப்பி சுட்டு எடுக்கவும். (சீஸ் உருகும்வரை)

சுவையான வெஜ் கேசடீயா தயார். இதை அப்படியே சாப்பிடலாம்.

குறிப்புகள்:

இதற்கு 8 அங்குல ரோர்டியாவை பயன்படுத்தவும். சீஸ் சிறிது அதிகமாகவே போடவும் அப்பொழுதுதான் சாப்பிடும்போதும் கேசடீயா பிரியாது ஒட்டிக்கொண்டே இருக்கும். பச்சை மிளகாய்க்கு பதில் மிளகாய்தூளை அதிகமாக சேர்க்கலாம். பச்சை மிளகாய் போடாவிட்டாலும் சுவையாகவே இருக்கும்.உள்ளே வைக்கும் ஃபில்லிங்கிற்கு வதக்கும்போது வாசனைக்காக 1/2 தேக்கரண்டி ஒரெகனோ (Oregano) சேர்க்கலாம்.