வெஜ்ஜி கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ப்ராக்கலி - 1 1/2 கப் ஸ்வீட் கார்ன் - அரை கப் வெங்காயம் - 2 மேசைக்கரண்டி வால்நட் - அரை கப் ஆல் பர்பஸ் மாவு - அரை கப் பூண்டு - 2 பல் உப்பு - தேவையான அளவு வெண்ணெய் - கால் கப் பால் - அரை கப் முட்டை - 2 செட்டர் சீஸ் - ஒரு கப்

செய்முறை:

வால்நட்

பூண்டு

வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வெண்ணெயை உருக்கி வைக்கவும். ப்ராக்கலி மற்றும் சோளத்தை அவித்து வைக்கவும்.

வேக வைத்த ப்ராக்கலியை பொடியாக நறுக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்

வால்நட்

கார்ன்

பூண்டு

உப்பு சேர்த்து கலந்து விடவும்.

ஆல் பர்பஸ் மாவு

முட்டை

பால் மற்றும் வெண்ணெயை ஒன்றாக சேர்த்து கலக்கவும். கட்டியில்லாமல் தனித்தனியே தெரியாமல் ஒன்றாக கலந்தால் மட்டுமே போதும். நுரை வரும் வரையில் அடிக்க தேவையில்லை.

இந்த கலவையை ப்ராக்கலி கார்ன் கலவையில் ஊற்றவும். எல்லவற்றையும் ஒன்றாக கலந்து விடவும்.

அவனை 200 c முற்சூடு செய்யவும். பின்பு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி இந்த கலவையை ஊற்றி உள்ளே வைக்கவும்.

இருபது முதல் இருபத்தி ஐந்து நிமிடம் பேக் செய்யவும். ஒரு சின்ன போர்க் அல்லது டூத் பிக் கொண்டு குத்திப்பார்த்தால் ஒட்டாமல் வரும் அது தான் சரியான பதம். நேரம் மாறுபடலாம். அப்படி ஒட்டாமல் வரும்போது வெளியில் எடுத்து துருவிய சீஸை மேலே பரவலாக தூவி விட்டு திரும்பவும் அவனில் வைக்கவும். இரண்டு முதல் ஐந்து நிமிடம் அல்லது சீஸ் முழுவதும் உருகும் வரையில் வைத்திருந்து எடுத்து விடவும்.

முப்பது நிமிடம் கழித்து துண்டுகளாக்கி பரிமாறவும். சுவையான சத்தான மாலை நேர ஸ்நாக் ரெடி. சீஸ்

ப்ராக்கலியில் கால்சியம் அதிகம் இருப்பதால் பால் குடிக்க அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல மாற்று உணவு.

குறிப்புகள்: