வெஜி றோல்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெட்டிய வெள்ளை முள்ளங்கி - 1/4 கப்

வெட்டிய சிவப்பு முள்ளங்கி - 1/4 கப்

வெட்டிய கரட் - 1/4 கப்

வெட்டிய கபேஜ் - 1/4 கப்

வெட்டிய வெங்காயம் - 1/4 கப்

வெட்டிய காலிஃபிளவர் - 1/4 கப்

உள்ளி - 5

கறித்தூள் - 1 மேசைக்கரண்டி

உப்பு

ஒலிவ் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

சோயாபால் / பால் - 11/2 கப்

உடைத்த பாதாம் பருப்பு - 1/4 கப்

பைலோ ஷீட் / பேஸ்ரி ஷீட் - 1 பாக்கெட்

எள்ளு - 3 மேசைக்கரண்டி

செய்முறை:

ஒலிவ் எண்ணெயை சூடாக்கி உள்ளி, வெங்காயத்தைவதக்கவும்.

பின்னர் ஏனைய வெட்டி வைத்த மரக்கறிகளை போட்டு வதக்கவும்.

ஓரளவு வதங்கியதும் அதனுள் உப்பு, பால், கறித்தூளைப்போட்டு கலக்கவும்.

பால் வற்றி மரக்கறி வெந்ததும் இறக்கவும்.

ஒரு பேஸ்ரி ஷீடில் சிறிது பாதாமை தூவவும் அதன் மேல் இன்னொரு பேஸ்ரி ஷீட்டை வைக்கவும். மீண்டும் பாதாமை தூவவும். இவ்வாறு 3 லேயர்கள் அடுக்கவும்.

இதன்மேல் மூன்றில் ஒரு பங்கு கறியை நீளவாக்கில் வைத்து உருட்டவும். இவ்வாறு 3 றோல்கள் செய்யவும்.

மேலே ஒரு பிரஷால் ஒலிவ் எண்ணெய் பூசி எள்ளு தூவி 350 F இல் 5 - 10 நிமிடங்களுக்கு பேக் செய்து எடுக்கவும்.

சுவையான வெஜி றோல்ஸ் தயார். பரிமாறும் போது சிறிய துண்டுகளாக சாய்வாக வெட்டி குவாக்கமோலி (Guacamole) அல்லது ஏதாவது ஸோஸுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: