வெஜிடபுள் கறி
தேவையான பொருட்கள்:
காய் கலவை - ஒரு பெரிய பவுல் வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - சிறிது பந்தன் இலை - 2 துண்டுகள் தேங்காய் - 2 துண்டுகள் மிளகாய் வற்றல் - 5 ஏலக்காய் - 4 இஞ்சி
பூண்டு - சிறிது சோம்பு - கால் தேக்கரண்டி சீரகம் - அரை தேக்கரண்டி பட்டை - ஒரு துண்டு மஞ்சள் தூள் - சிறிது எண்ணெய் - தேவைக்கு உப்பு முதல் தேங்காய் பால் - ஒரு கப் இரண்டாம் தேங்காய் பால் - ஒரு கப்
செய்முறை:
பாதி வெங்காயம்
மிளகாய் வற்றல்
தேங்காய்
சோம்பு
சீரகம்
மஞ்சள் தூள்
இஞ்சி
பூண்டு
பட்டை
ஏலக்காய் சேர்த்து தேவையான நீர் விட்டு அரைத்து கொள்ளவும்.
காய்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை
பந்தன் இலை
வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதக்கியதில் பாதியை எடுத்து முதல் தேங்காய் பாலில் கலந்து வைக்கவும்.
மீதம் உள்ளவற்றில் சிறிது இரண்டாம் பால் விட்டு காய் கலவை
உப்பு சேர்த்து மூடி வேக விடவும்.
இதில் அரைத்த விழுது சேர்த்து மீதம் உள்ள இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து மசாலா வாசம் போகக் கொதிக்கவிடவும்.
பின் முதல் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வரத்துவங்கியதும் இறக்கவும்.
சுவையான மாலத்தீவு வெஜிடபுள் கறி தயார். இது ரோஷி மற்றும் சாதத்திற்கு நல்ல ஜோடி.