வெஜிடபிள் குட்டி தோசை
தேவையான பொருட்கள்:
தோசை மா - 2 கப்
கேரட் (துருவியது) - ஒரு மேசைக்கரண்டி
பீன்ஸ் (பொடியாக நறுக்கியது) - ஒரு மேசைக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி (பொடியாக நறுக்கியது) - ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - அரை தேக்கரண்டி
பட்டாணி (உரித்தது) - ஒரு மேசைக்கரண்டி
சோம்பு (சீரகம்) - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை(தாட்சியை) வைத்து சூடாக்கவும். அது சூடானதும் அதில் கடுகு போடவும்.
கடுகு வெடித்ததும் சீரகத்தை(சோம்பு)போடவும். அது ஓரளவு பொரிந்ததும் அதில் வெங்காயம், கேரட், பீன்ஸ், தக்காளி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதக்கிய பின்பு தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கவும். வதக்கியவற்றை தோசை மாவில் கலக்கவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி அதன் மேல் கலக்கி வைத்திருக்கும் தோசை மாவினை ஒரு சிறு கரண்டியால் எடுத்து சிறிய சிறிய வடிவங்களில் தோசையாக(சிறுவர்களுக்கு பிடித்த வடிவங்களில்) ஊற்றவும்.
அது நன்கு சிவக்க வெந்ததும் அதை திருப்பி போட்டு எடுக்கவும். அத்தோசைகளை சிறுவர்களுக்கு சூட்டுடன் கொடுக்கவும்.
குறிப்புகள்:
சிறுவர்களுக்கு(குட்டீஸ்களுக்கு) மிக மிக பிடித்ததும் சத்துகள் நிறைந்ததுமான ஓர் சிற்றுண்டியே வெஜிடபிள் குட்டி தோசை ஆகும். ஆகவே இதை குட்டீஸ்க்கு செய்து கொடுக்கவும், இதை குட்டீஸ் விரும்பி சாப்பிடுவார்கள். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடானதும் அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி அதன் மேல் கலக்கி வைத்திருக்கும் தோசை மாவினை சிறு கரண்டியால் எடுத்து சிறிய சிறிய வடிவங்களில் தோசையாக (சிறுவர்களுக்கு பிடித்த வடிவங்களில்) ஊற்றவும்.