வெங்காய பொக்காசியா பிரெட்
தேவையான பொருட்கள்:
unbleached மைதா - 2 கப்
ஈஸ்ட் - 1பாக்கெட் (2 1/2 தேக்கரண்டி or 0.25oz)
உப்பு
சீனி - 1/4 தேக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 5 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
ரோஸ்மேரி இலை - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் சீனியை போட்டு 5 - 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.
மாவினுள் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
இதனுள் ஈஸ்ட் கரைசலை சேர்த்து சப்பாத்தி மாவு பததிற்கு நன்கு அழுத்தி குழைக்கவும்.
பின்னர் ஒரு எண்ணெய் பூசிய கிண்ணத்தில் போட்டு மூடி 1 ௧1/2 மணித்தியாலங்கள் மிதமான சூடான இடத்தில் வைக்கவும்.
இப்பொழுது மா இருமடங்கு ஊதியிருக்கும். இதனை எடுத்து மென்மையாக பிசையவும்.
ஒரு தட்டையான பெரிய பேக்கிங் பானில் ஒலிவ் எண்ணெய் தடவவும்.
இதனுள் குழைத்த மாவை வைத்து அழுத்தி 3/4 - 1 அங்குல உயரத்திற்கு பரவி ஒரு ஈரத்துணியால் மூடி மிதமான சூடுள்ள இடத்தில் 30 நிமிடங்களுக்கு வைக்கவும்.
அவனை 400 Fஇல் முற்சூடு பண்ணவும்.
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி 3 மேசைக்கரண்டி எண்ணெயில் வதக்கவும்.
மறுபடியும் மா பொங்கி இருக்கும். இதன் மேல் ஒரு விரலால் சிறிய பள்ளங்களாக வரிசையாக மென்மையாக அழுத்தி விடவும்.
இதன் மேல் மீதி ஒலிவ் எண்ணெயை ஒரு பிரஷால் தடவி வதக்கிய வெங்காயத்தை பரப்பி ரோஸ்மேரி இலை, உப்பு தூவவும்.
பின்னர் முற்சூடு படுத்திய அவனில் 20 - 25 நிமிடங்கள் அல்லது மேற்பக்கம் சிறிது பிரவுண் நிறமாகும்வரை வைத்து எடுக்கவும்.
சுவையான பிரெட் தயார். இதனை துண்டுகளாக வெட்டி தனியேயும் சாப்பிடலாம். அல்லது பக்க உணவுகளுடனும் சாப்பிடலாம்.
குறிப்புகள்:
இதற்கு மைதாவும் பாவிக்கலாம். இதற்கு sweet onion நன்றாக இருக்கும். ரோஸ்மேரி இலைக்கு பதில் தைம் இலையும் சேர்க்கலாம். வெங்காயத்தை பட்டரிலும் வதக்கலாம். சுவையாக இருக்கும். பட்டரில் வதக்கும் போது நன்கு வதக்காமல் ஓரளவு வதக்கினாலே போதும். திரும்பவும் பேக் பண்ணும் போது அது நன்கு வதங்கிவிடும்.