வியட்நாம் கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஜவ்வரிசி - 100 கிராம்

அவித்த சோள முத்துக்கள் - ஒரு கப்

சீனி - கால் கிலோ

கெட்டியான தேங்காய் பால் - ஒரு கப்

உப்பு - ஒரு சிட்டிகை

டவுன் பான்டா இலை - ஒன்று

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

பின்பு அதில் டவுன் பான்டா இலையை போடவும்.

பின்பு அதில் ஜவ்வரிசியை போடவும் சோளத்தை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும், ஜவ்வரிசி அடிபிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும் சோளத்தை அதில் சேர்க்கவும், பின்பு உப்பு சீனி சேர்க்கவும், பின்பு தேங்காய் பாலை சேர்த்து கொதி வந்த பின்பு இறக்கவும்.

குறிப்புகள்: