வாழைப்பழ சிப்ஸ்
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2
முட்டை - ஒன்று
மைதா மா - ஒரு கப்
சர்க்கரை (சீனி) - தேவையானளவு
உப்பு - ஒரு சிட்டிகை
மஞ்சள் கலர் - சிறிது(விருப்பபட்டால்)
எண்ணெய் - தேவையானளவு
தண்ணீர் - தேவையானளவு
செய்முறை:
வாழைப்பழத்தை பஜ்ஜிக்கு நறுக்குவது போல் நீளவாக்கில் சற்று கனமாக நறுக்கி கொள்ளவும்.
மைதாமா, முட்டை, சர்க்கரை (சீனி), உப்பு, மஞ்சள் கலர் ஆகியவற்றையும் போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கவும்.
அது சூடாகியதும் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கிய பின்பு அதில் வாழைப்பழத்தை மாவில் முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
பின்பு எண்ணெயை வடித்து விட்டு ஓரு தட்டில் வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
வாழைப்பழ சிப்ஸ் மிக மிக சுவையானதும் சத்துக்கள் நிறைந்ததுமாகும். மாற்று முறை - தேங்காய் பாலும் ஊற்றலாம், முட்டை இல்லாமலும் இதை செய்யலாம்,மீதியிருக்கும் மாவினை வீணாக்காமல் சின்ன ஸ்பூனால் எடுத்து அதில் எண்ணெயில் ஊற்றி பொரித்து எடுத்து சாப்பிடலாம்.