வாழைப்பழ கேக்
தேவையான பொருட்கள்:
கோதுமை மா (மைதா)- 1 1/2கப்
சீனி - 1/2 கப்
வாழைப்பழம் - 1 பெரியது (அல்லது 2 சிறியது)
பொடித்த வால்நட்ஸ் - 1/2 கப்
பால் - 1கப்
பட்டர்/எண்ணெய் - 1/2கப்
பேகிங் சோடா - 1 தேக்கரண்டி
உப்பு - 1 டீஸ்பூன்
8" கேக் பான் - 1
பேகிங் ஸ்பிரே
செய்முறை:
கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.
வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கோதுமை மா, உப்பு, பேக்கிங் சோட சேர்த்து 3 தடவை அரிக்கவும் (சலிக்கவும்)
சீனி, உருக்கிய பட்டர் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.
பின்னர் பாலை சிறிது சூடாக்கி சீனியுடன் சேர்த்து அடிக்கவும்.
பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்)
பின்னர் வெட்டிய வாழைப்பழம், பொடித்த வால்நட்ஸ் சேர்த்து கலக்கவும்.
பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 Fஇல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.