வாழைப்பழம் கேக்
0
தேவையான பொருட்கள்:
பெரிய வாழைப்பழம் - 5
ஸ்வீட் ப்ரெட் பாக்கெட் - ஒன்று
தேங்காய்பால் டின் - ஒன்று (400 மி.லி)
கன்ஸ்டர்ட் மில்க் டின் - ஒன்று (400 மி.லி)
வெனிலா பவுடர் - ஒரு தேக்கரண்டி
பட்டர் - 100 கிராம்
முட்டை - 4
சர்க்கரை - அவரவர் சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் முட்டையை கலக்கவும். பின்பு அதில் பால் சேர்க்கவும்.
பின்பு அதில் ப்ரெட் மற்றும் வாழைப்பழம் வெனிலா பவுடர், சர்க்கரை, உருக்கிய பட்டர் எல்லா பொருட்களையும் போட்டு கைகளால் நன்கு பிசையவும்.
பிறகு கேக் தட்டில் ஊற்றி அவனில் 200 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
செய்வது எளிது. வெந்ததும் சரி பார்த்து வெளியே எடுக்கவும்.