வாழைக்காய் பொரியல் (சிப்ஸ்)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 4

மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி

உப்பு

எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை:

வாழைக்காயை தோல் சீவி மெல்லிய வட்ட வட்ட துண்டுகளாக வெட்டி சுத்தப்படுத்தவும்.

வெட்டிய துண்டுகளை மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து பிரட்டவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி இந்த துண்டுகளை போட்டு முறுக பொரித்து(deep fry) எடுத்து ஒரு பேப்பரில் பரவவும் (எண்ணெய் ஒற்றுவதற்கு).

சுவையான மொறுமொறுப்பான வாழைக்காய் பொரியல் (சிப்ஸ்)தயார். இதனை சோறுடன் அல்லது சிற்றுண்டியாக உண்ணலாம்.

குறிப்புகள்: