வாழைக்காய் பிரட்டல்
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 400 கிராம் வெங்காயம் - 50 கிராம் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 4 அல்லது 5 பற்கள் கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி பால் - 100 மி.லி சுடுத் தண்ணீர் - 100 மி.லி உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு தேசிக்காய் - பாதி. கறிவேப்பிலை - 2 நெட்டுக்கள்
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாழைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
வாழைக்காயை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம்
பச்சை மிளகாய்
பூண்டு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
வதங்கியதும் அதனுடன் கறித்தூள் சேர்த்து கிளறி விடவும்.
அதன் பின்னர் பாலையும் தண்ணீரையும் ஊற்றி உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் பொரித்து வைத்திருக்கும் வாழைக்காயை சேர்த்து பிரட்டி விட்டு வேக விடவும்.
குழம்பு நன்கு திக்கானதும் கறிவேப்பிலை
கரம் மசாலா தூள் போட்டு பிரட்டி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி வைத்து மேலே தேசிக்காயை பிழிந்து விட்டு பிரட்டி வைக்கவும்.
சுவையான வாழைக்காய் பிரட்டல். சூடாக பரிமாறினால் நன்கு சுவையாக இருக்கும். அறுசுவையில் இலங்கை சமையல் குறிப்புகள் வழங்கிவரும் திருமதி. அதிரா அவர்கள் செய்து காண்பித்த குறிப்பு இது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.