வாய்ப்பன் (1)
தேவையான பொருட்கள்:
கோதுமை மா - 2கப்
நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 பெரியது
சீனி - 1/2கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
உப்பு
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
கோதுமை மாவினுள் உப்பு, பேக்கிங் பவுடர், சீனி சேர்த்து கலக்கவும்.
பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்து கோதுமை மா கலவையுடன் கலந்து நன்கு பிசையவும்.
கலவை சிறிது கெட்டியான சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்வரை பிசையவும். தேவைப்படில் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை கொதிக்க வைக்கவும்.
கையை தண்ணீரில் நனைத்து ஈரக் கையுடனேயே மாவை சிறிய பந்து போன்ற உருண்டைகளாக உருட்டி கொதிக்கும் எண்ணெயினுள் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான வாய்ப்பன் தயார்.
குறிப்புகள்:
ஒவ்வொரு முறை உருண்டை பிடிக்கும் போதும் கையை தண்ணீரில் நனைக்கவும். வாழைப்பழம் நன்கு கனிந்திருந்தால் மா கெட்டியாக வராது. எனவே பிசையும் போது மேலதிகமாக சிறிது மா சேர்க்கவும்