வாய்ப்பன்
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 2 கப் நன்கு பழுத்த வாழைப்பழம் - 2 (பெரியது) சீனி - அரை கப் பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி எண்ணெய் - பொரிப்பதற்கு உப்பு
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
கோதுமை மாவுடன் உப்பு
பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவும். வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவும்.
சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும். (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம்)
வாணலியில் எண்ணெயைக் கொதிக்கவிடவும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு
பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பிறகு அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான வாய்ப்பன் தயார்.