வல்லாரை காரட் வறை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வல்லாரை - 1 கட்டு

காரட் - 2

வெங்காயம் - 1

காய்ந்தமிளகாய் - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் -

கறிவேப்பிலை - சிறிதளவு

தேங்காய்ப்பூ - 1 மேசைக்கரண்டி (விருப்பமென்றால்)

செய்முறை:

வல்லாரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

காரட்டை துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு போட்டு அது வெடித்ததும் வெங்காயம்,பெருஞ்சீரகத்தைப் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, மிளகாயைப் போட்டு வதக்கவும்.

பின்பு வல்லாரை, காரட்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

உப்பு சேர்த்து 3 நிமிடம் மூடி வேகவிடவும்.

மிளகாய்த்தூளை சேர்த்து தேவையாயின் தண்ணீர் தெளித்து கிளறி மேலும் 2 நிமிடம் மூடி விடவும்.

தேங்காய்ப்பூவை சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கவும்.

இந்த வறையை சோற்றுடன் சாப்பிடலாம்.

குறிப்புகள்: