வம்பட்டு மோஜு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. கத்திரிக்காய் - 3

2. வெங்காயம் - 1/2

3. பச்சை மிளகாய் - 2

4. கறித்தூள் - 1/2 தேக்கரண்டி

5. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

6. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

7. வினிகர் - 2 மேஜைக்கரண்டி

8. சர்க்கரை - 1 மேஜைக்கரண்டி

9. உப்பு - சுவைக்கு

10. கடுகு - 1/2 தேக்கரண்டி

11. இஞ்சி - 1 சிறு துண்டு

12. பூண்டு - 2 பல்

13. எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

கத்திரிக்காயை நீளவாட்டில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் பிரட்டி ஊற வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிது சிறிதாக கத்திரிக்காயை போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

இஞ்சி, பூண்டு, கடுகு மூன்றையும் ஒன்றாக அரைத்து வைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சிவந்ததும் அரைத்த விழுது மற்றும் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

கடைசியாக கத்திரிக்காயும் சேர்த்து பிரட்டி எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வினிகருடன் சர்க்கரை சேர்த்து கலந்து அதில் சமைத்த கலவை சேர்த்து பிரட்டி வைக்கவும்.

இது ஃப்ரைட் ரைஸ், பிரியாணியுடன் நல்ல சுவையாக இருக்கும்.

குறிப்புகள்:

இது இலங்கை ஊறுகாய் வகை. அவர்கள் இதில் நெத்திலி கருவாடும் சேர்ப்பாங்கலாம். எங்கள் ட்ரைவர் சொன்னதை வைத்தும் சுவைத்ததை வைத்தும் முயற்சித்தேன்... பின் இமா சொன்னதை வைத்து மாற்றி முயற்சித்தேன். முதலில் நான் இதில் தேங்காய் பாலும் சேர்த்து செய்திருந்தேன். சுவையில் மாற்றம் இருக்கிறது. வினிகருக்கு பதில் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம். தேங்காய் பால் சேர்க்காமல் செய்தால் வாரக்கணக்கில் ஊறுகாயாக ஸ்டோர் பண்ணிக்கலாம். இங்கு உள்ள தோழி ஒருவர் இஞ்சி பூண்டு கடுகு விழுதை பச்சையாக சேர்ப்போம் என்றார். விரும்பினால் அப்படியும் முயற்சி செய்யுங்கள். இங்கே எனக்கு பிடித்த சுவையில் தந்திருக்கிறேன். வழக்கம் போல இலங்கை உணவில் எனக்கு உதவி செய்யும் இமாக்கு நன்றி :)