வட்டிலப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 250 கிராம்

தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) - (1-2) கப்

முட்டை - 5

ஏலக்காய்த்தூள் - அரைதேக்கரண்டி

கஜூ - 30 கிராம்

பிளம்ஸ் - 30 கிராம்

ஜாதிக்காய்த்தூள் - அரை தேக்கரண்டி(விரும்பினால்)

மாஜரின் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

தேங்காய்ப்பாலில் சர்க்கரையை நன்றாக கரைக்கவும். சர்க்கரை நன்றாக கரைந்ததும் வடிதட்டினால் வடிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எல்லா முட்டைகளையும் உடைத்து போட்டவும்.

எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் மாஜரின் பூசிய பின் சர்க்கரை கலந்து வடித்த பாலுடன் கஜூ, பிளம்ஸ், ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.

பின்பு அக்கலவையுடன் அடித்த முட்டையின் நுரையை கைகளினால் கிள்ளி(அள்ளி) இக்கலவையின் மேலே போடவும் (கரண்டி பாவிக்ககூடாது அத்துடன் கலக்கவும் கூடாது, அசைக்கவும் கூடாது).

அப்பாத்திரத்தை மைக்ரோ அவனில் அல்லது நீராவியில் அவிக்கவும்.

அவித்த பின்பு பிரிட்ஜில் வைத்து குளிருட்டிய பின்பு அதை ஐஸ்கிரீம் போடும் கரண்டியால் எடுத்து ஐஸ்கிரீம் கப்பில் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

இலங்கையில் வாழ்கின்ற முஸ்லீம் மக்களினால் செய்யப்படும் முக்கியமான உணவு வட்டிலப்பம் ஆகும். இதை அவர்கள் நோன்பு காலங்களில் முக்கியமாக செய்வார்கள் . (a) எச்சரிக்கை - சர்க்கரை நோயாளர்கள் வைத்தியரின் ஆலோசனை கேட்டு உண்ணவும். (b)மாற்று முறை- (1)சர்க்கரைக்கு பதிலாக கித்தூள் பாவிக்கலாம்.(2)ஏலக்காய்த்தூள்க்கு பதிலாக வெனிலா பாவிக்கலாம்.(3)மாஜரின் பதிலாக பட்டர் பாவிக்கலாம் (c)கவனிக்க வேண்டிய விஷயங்கள் -(1) தேங்காய் பால் (தடிப்புகூடிய முதல்பால்)(2)எக்பீட்டரினால் முட்டையை நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும். (3)தேங்காய்ப்பாலில் சர்க்கரையை கட்டியில்லாமல் நன்றாக கரைக்கவும்.