லெஸி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - 4 கப்

சீனி - 200 கிராம்

வெனிலா - ஒரு மேசைக்கரண்டி

கலரிங்(விரும்பிய) - 4 துளிகள் (விரும்பினால்)

செய்முறை:

தயிர், சீனி இரண்டையும் ஒன்றாக கலந்து கிரைண்டரிலிட்டு சீனி கரையும் வரை நன்றாக அடிக்கவும்.

அடித்த கலவையினுள் வெனிலா, கலரிங் விட்டு மீண்டும் நன்றாக அடிக்கவும்.

பின்பு அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

அதன் பின்பு தேவையான போது அதை பரிமாறலாம்.

குறிப்புகள்:

இலங்கையில் வெயில் காலங்களுக்குரிய பிரபல்யமான பானம் லெஸி. அத்துடன் இது ஒரு குளிர்மையான பானம். எச்சரிக்கை - ஆஸ்மா நோயாளர், சர்க்கரைநோயாளர், இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி லெஸி அருந்தவும்.