லெபனீஸ் ஃபளாஃபில் (Falafel)
தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை - ஒரு கோப்பை
கேரட் - ஒரு கோப்பை
முட்டைகோஸ் நறுக்கியது - அரைக்கோப்பை
வெங்காயம் - ஒன்று
பூண்டு - நான்கு
பச்சைமிளகாய் - இரண்டு
மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி, புதினா - ஒரு பிடி
தயிர் - அரைக்கோப்பை
நறுக்கிய தக்காளி - ஒரு கோப்பை
நறுக்கிய சாலட் இலை - ஒரு கோப்பை
ரொட்டி(அ)சப்பாத்தி - பத்து
எண்ணெய் - இரண்டு கோப்பை
செய்முறை:
கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
மற்ற நாள் ஊறிய கடலையுடன், பச்சைமிளகாய், சீரகம், கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து வைக்கவும்.
வெங்காயம், பூண்டு, முட்டைகோஸ், கேரட் ஆகியவற்றை பொடியாக நறுக்கி அரைத்து வைத்துள்ளவற்றில் சேர்த்து வைக்கவும்.
பிறகு எல்லாத்தூளையும் அதில் சேர்த்து கலக்கி வைக்கவும்.
சட்டியில் எண்ணெயைக் காயவைத்து கடலை கலவையிலிருந்து பெரிய எலுமிச்சையளவு எடுத்து கைகளில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
இவ்வாறு எல்லா மாவையும் தட்டி சிவக்க பொரித்தெடுக்கவும்.
இதனை சப்பாத்தி அல்லது கோதுமையில் செய்த சுக்கா ரொட்டியில் வைத்து அதில் தேவையான அளவு நறுக்கிய தக்காளி, சாலட் இலையை வைத்து அதன் மேல் சிறிது உப்பு, மிளகுத்தூள் கலந்த தயிரை சேர்த்து சுருட்டி வைக்கவும்.
இவ்வாறே எல்லாவற்றையும் சுமார், பத்து சுமாரான அளவுள்ள ரொட்டியில் வைத்து சுருட்டி பரிமாறவும்
மத்திய உணவிற்கு மிகவும் ஏற்ற சத்து நிறைந்த உணவிது.