லென்ரில் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/4 கப்

மைசூர் பருப்பு - 1/4 கப்

கடலைப்பருப்பு - 1 கைப்பிடி

ஃபுரோஸன் லீமா பீன்ஸ் - 1/2 கப்

(frozen Lima beans)

சிறிய சீரக தூள்- 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 மேசைக்கரண்டி

மல்லித்தூள் - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 நெட்டு

புளி - பாக்களவு

உப்பு

காராசேவு - 1 கப்

செய்முறை:

புளியை கரைத்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எல்லா பருப்பு வகைகளையும் போட்டு அவிய விடவும்.

பருப்புகள் நன்கு அவிந்ததும் உப்பு, மிளகு தூள், கறிவேப்பிலை, மல்லித்தூள், சிறிய சீரக தூள், புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும்.

ஃபுரோஸன் லீமா பீன்ஸை தனியே உப்பு போட்டு அவித்து வைக்கவும்.

பின்னர் ஆறிய பருப்பு கலவையை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். (அவித்த தண்ணீருடன்).

அரைத்த கவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மீண்டும் கொதிக்க வைத்து அதனுள் அவித்த லீமா பீன்ஸை போட்டு கலக்கி இறக்கவும்.

சுவையான லென்ரில் சூப் தயார். இதனை சூப் பரிமாறும் கிண்ணங்களில் ஊற்றி காராசேவு தூவி பரிமாறவும்.

குறிப்புகள்:

காராசேவிற்கு பதிலாக 'Gold fish' குக்கீஸ், ஓமப்பொடி, மிக்சரும் பாவிக்கலாம். பருப்பை கிரைண்டரில் அரைக்கும் போது நன்கு ஆறவிடவும். ஏனெனில் சூடாக இருந்தால் கிரைண்டர் மோட்டருக்கு கூடாது அத்தோடு சில வேளைகளில் தெறிக்க பார்க்கும். (அனுபவம்)