லெட்டூஸ் ரோல்ஸ் (Lettuce Rolls)
தேவையான பொருட்கள்:
லெட்டூஸ் இலைகள் - 5 நூடில்ஸ் - 1/2 கப் உருளை - 2 பெரிது கத்தரிக்காய் - 1 பெல் பெப்பர் - 1 வெங்காயத்தாள்(Scallion) - 10 உப்பு மிளகாய்த்தூள் எண்ணெய் கொத்தமல்லி இலை
செய்முறை:
லெட்டூஸ் இலையை சுத்தப்படுத்தி சரி பாதியாக நடுக்காம்பினூடாக நீளவாக்கில் வெட்டி வைக்கவும். (தடிப்பாக இருக்கும் அடி காம்பை வெட்டி விடவும்.) உருளைக்கிழங்கை தடித்த நீள துண்டுகளாக வெட்டி (ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் போல) உப்பு
மிளகாய் தூள் பிரட்டி வைக்கவும்.
நூடுல்ஸை உப்பு போட்டு அவித்து வடி கட்டி வைக்கவும். (1/2 கப் தண்ணீர்) வெங்காயத்தாளை உப்பில் பிரட்டி ஆவியில் அல்லது கொதிதண்ணீரில் அவித்து வைக்கவும்.
கத்தரிக்காயை தடித்த வட்டங்களாக வெட்டி பாதியாக்கி உப்பு
மிளகாய் தூள் பிரட்டி வைக்கவும். பெல் பெப்பரை நீளமான துண்டுகளாக வெட்டி சிறிது உப்பில் பிரட்டி வைக்கவும்.
எண்ணெய்யில் உருளை
கத்தரியை தனித்தனியே சோட்டேட் (sauteed) செய்யவும்.
ஒரு பாதி லெட்டூசை எடுத்து அதன் ஒரு பாதி ஓரத்தில் சிறிது நூடில்ஸ்
1 துண்டு உருளை
1 துண்டு பெல் பெப்பர்
1 அல்லது 2 துண்டு கத்தரிக்காய்
கொத்தமல்லி இலை வைத்து உருட்டி அவித்த வெங்காயத்தாளால் சுற்றிக் கட்டவும்.
ரோல்ஸின் இரு ஓரங்களையும் வெட்டிவிடவும் அல்லது உள்ளே மடித்து விடவும். சுவையான லெட்டூஸ் ரோல்ஸ் தயார். இதனை பிடித்தமான ஸாஸுடன் சாப்பிடலாம்.