லெக் சிக்கன் ப்ரெட் லாலிபாப்
தேவையான பொருட்கள்:
ப்ரெட் - 4
சிக்கன்(லெக் பீஸ்) - 4
தயிர் - அரை கப்
கருவாப்பட்டை(தூளாக்கியது) - 2
கிராம்பு(லவங்கம்) (தூளாக்கியது) - 2
ஏலக்காய்((தூளாக்கியது) - 2
இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி
உள்ளி(பூண்டு) விழுது - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் - (2 - 3) தேக்கரண்டி
சோளம் மாவு - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அஜினோமோட்டோ - சிறிதளவு(விரும்பினால்)
கறிவேப்பிலை(தூளாக்கியது) - சிறிதளவு
செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு தண்ணீரை விட்டு அதனுடன் சிக்கன் லெக் பீஸை போட்டு ஓரளவு அவிய விடவும்.
சிக்கின் லெக்பீஸ் ஓரளவு அவிந்ததும் அதிலிருக்கும் தண்ணீரை வடித்து விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் தயிர், கருவாபட்டை(பட்டை)தூள், கிராம்பு(லவங்கம்)தூள், ஏலக்காய்த்தூள், இஞ்சி விழுது, உள்ளி(பூண்டு)விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோளம் மாவு, உப்பு, அஜினோமோட்டோ, தூளாக்கிய கறிவேப்பிலை ஆகியவற்றை கலந்து வைக்கவும்.
ஓரளவு அவிந்த லெக்பீஸில் முள்ளுகரண்டியால் ஓரளவு மெதுவாக குத்திவிடவும்(லெக்பீஸின் உட்பகுதியில் மசாலா நன்றாக கலப்பதற்காக).
பின்பு அவித்து மெதுவாக முள்ளுகரண்டியால் குத்திய லெக்பீஸ்துண்டை கலந்து வைத்திருக்கும் மசாலாவில் (20 - 30)நிமிடங்கள் நன்றாக கலந்து ஊறவைக்கவும்.
அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து சூடாக்கியதும் அதில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
மசாலாவில் சிக்கன் லெக்பீஸ் ஊறிய பின்பு ப்ரெட்டின் ஓரங்களை வெட்டி கழித்துவிட்டு அதன் நடுப்பகுதியை எடுக்கவும்.
எடுத்த ப்ரெட்டின் நடுப்பகுதியை தயிரில் தோய்த்து எடுக்கவும். பின்பு தயிரில் தோய்த்து எடுத்த ப்ரெட்துண்டினை எடுத்து அதனை மசாலாவில் ஊறிய லெக்பீஸில் நன்றாக சுற்றவும்.
அடுப்பில் உள்ள தாட்சியில்(வாணலியில்) உள்ள எண்ணெய் சூடான பின்பு அதில் மசாலா கலந்து ப்ரெட் துண்டு சுற்றிய லெக்பீஸை போட்டு நன்றாக பொரித்தெடுக்கவும்.
நன்றாக பொரிந்த பின்பு எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி எண்ணெயை வடியவிடவும்.
எண்ணெய் வடிந்த பின்பு நல்ல சுவையான சத்தான லெக் சிக்கன் ப்ரெட் லாலிபாப் தயாராகி விடும்.
அதன் பின்பு ஒரு தட்டில் சோறு(சாதம்), இடியப்பம், புட்டு, பாண் ஆகியவற்றில் ஒன்றை வைத்து அதனுடன் லெக் சிக்கன் ப்ரெட் லாலிபாப்பை வைத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
லெக்சிக்கன் ப்ரெட் லாலிபாப் வித்தியாசமான சுவையுடையதும் செய்வதற்கு இலகுவானதும் சிறுவர்கள் முதல் பெரியவகள் வரை விரும்பி உண்ணக்கூடியதும் சத்துகள் நிறைந்ததும் ஆகும். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.