லாஹூரி சிக்கன் கறி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - அரை கிலோ வெங்காயம் - ஒன்று தக்காளி - 2 மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி தயிர் - 3/4 கப் பாதாம் - 10 கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி எண்ணெய் - தேவைக்கு உப்பு மிளகாய் வற்றல் - 2 கடுகு

சீரகம் - தாளிக்க புதினா - அரை பிடி மிளகு - அரை தேக்கரண்டி பூண்டு

இஞ்சி

செய்முறை:

கொத்தமல்லி

புதினா

இஞ்சி

பூண்டு

மிளகு சேர்த்து மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தவும்.

இத்துடன் தயிர் சேர்த்து நைசாக அரைக்கவும். வெங்காயம்

தக்காளி தனித்தனியாக அரைத்து வைக்கவும். பாதாமை நீரில் ஊற வைத்து அரைக்கவும்.

அரைத்த விழுதை சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து அத்துடன் அரை தேக்கரண்டி மிளகாய் தூள்

சிறிது உப்பு கலந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும்.

அதே எண்ணெயை தேவைக்கு எடுத்து அரைத்த வெங்காயத்தை சிவக்க வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிய வதக்கவும். பின் தூள் வகை எல்லாம் சேர்த்து பிரட்டவும்.

இத்துடன் மீதம் உள்ள தயிர் மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாக கொதி வந்ததும் அரைத்த பாதாம் விழுது சேர்க்கவும்.

எல்லாம் சேர்ந்து எண்ணெய் பிரிய கொதி வந்ததும் கடுகு

சீரகம்

மிளகாய் வற்றல் தாளித்து சேர்க்கவும். மீண்டும் ஒரு கொதி விட்டு கொத்தமல்லி தழை தூவி எடுக்கவும். சுவையான பாகிஸ்தானி லாஹூரி சிக்கன் கறி தயார். ரொட்டி

நாண் போன்றவைக்கு நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: