லட்டு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - ஒரு கப் தேங்காய்ப்பூ - அரை கப் சீனி - 1/2 - 3/4 கப் (இனிப்பின் தேவைக்கேற்ப) பட்டர்/மாஜரீன் - ஒரு மேசைக்கரண்டி சூடான பால் - 1 - 2 மேசைக்கரண்டி (தேவையெனில்) வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய்ப்பூவை போட்டு முறுக வறுத்து எடுக்கவும்.

அதேப் போல் ரவையையும் முறுக வறுத்தெடுக்கவும்.

வறுத்த ரவை மற்றும் தேங்காய்ப்பூவை மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் சீனியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும். (ஒன்றரை கம்பி பதம் - பிசுபிசுப்பாக)

பின்னர் அதனுள் வெனிலா எசன்ஸ்

பட்டர்

சூடான பால் (தேவையெனில் - கலவை குழையாமல் இருப்பின் மட்டும்) மற்றும் அரைத்த ரவை தேங்காய்ப்பூ கலவையை சேர்த்து கிளறவும்.

கலவை சூடாக இருக்கும் போதே உருண்டைகளாக அல்லது அச்சில் (eg.:measuring spoons) போட்டு எடுக்கவும்.

சுவையான லட்டு தயார். மாலை நேர சிற்றுண்டிக்கும் விஷேச வைபவங்களுக்கும் ஏற்றது. இந்த லட்டை செய்து காட்டியவர்

இலங்கைத் தமிழரான திருமதி. நர்மதா அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி

மெக்ஸிகன்

இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

குறிப்புகள்: