லசான்யா (Lasagna)
தேவையான பொருட்கள்:
பிரெட் - 1lb
கத்தரிக்காய்(eggplant) - 2 பெரியது
பட்டர் - சிறிது
ஒலிவ் எண்ணெய் - சிறிது
உப்பு
மைதா/கோதுமை மா - 1 கப்
தக்காளி ஸோஸ் - 4 கப்
பாஹ்மஜான்/மோற்சரில்லா சீஸ் - 3 கப்
செய்முறை:
அவனை 400 F இற்கு சூடாக்கவும்.
கத்தரிக்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக வெட்டி உப்பு தண்ணீரில் கழுவி பிழிந்து வைக்கவும்.
ஒரு பானில்(Pan) பட்டரை உருக்கி அதில் பிரெட் துண்டுகளை இரு பக்கமும் திருப்பி போட்டு டோஸ்ட் செய்யவும்.
வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை சிறிது உப்பில் பிரட்டி மைதா/கோதுமை மாவில் புரட்டி சிறிது ஒலிவ் எண்ணெயில் இரு பக்கமும் திருப்பி போட்டு பொரிக்கவும் (sautée)
பின்னர் ஒரு நீளமான செவ்வக வடிவ பேக்கிங் தட்டில் பட்டர் பூசி பிரெட் துண்டுகளை இடைவெளி இல்லாமல் நெருக்கமாக அடுக்கவும். பின்னர் 1கப் தக்காளி ஸோஸை பிரெட் துண்டுகள் மேல் பரவவும். பின்னர் பொரித்த கத்தரி துண்டுகளை நெருக்கமாக அடுக்கி அதன் மேல் 1 கப் துருவிய பார்மஜான்/மோற்சரில்லா சீஸை பரவலாக தூவவும்.
இவ்வாறு மீண்டும் 2 தடவை செய்யவும்.
பின்னர் இந்த லேயர்களை கைகளால் நன்கு அழுத்தி விட்டு 400 Fஇல் சூடாக்கிய அவனில் வைத்து 15 - 20 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகி சிறிது பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும்.
சுவையான லசான்யா தயார். இதனை துண்டுகளாக்கி அப்படியே அல்லது ஏதாவது ஸலட்டுடன் பரிமாறலாம். மதிய/மாலை/இரவு உணவுக்கு ஏற்றது.
குறிப்புகள்:
கத்தரிக்காய்க்கு பதிலாக Cucumber அல்லது Zucciniஉம் பாவிக்கலாம். இது ஒரு இத்தாலியன் சமையல். பிரெட் துண்டுகளுக்கு பதிலாக அகலமான லசான்யா பாஸ்தாவும் பாவிக்கலாம்.