ரோஷி (Roshi)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

1. மைதா மாவு

2. உப்பு

3. எண்ணெய்

செய்முறை:

நீரை கொதிக்க விட்டு அதில் தேவையான உப்பு மற்றும் சிறிது எண்ணெய் விட்டு கொள்ளவும்.

இதில் மைதா மாவை கொட்டி கைவிடாமல் கிளறவும்.

மாவு சரியான பதம் வந்ததும் சிறிது ஆற விட்டு நன்றாக சப்பாத்தி மாவு போல் பிசையவும்.

பிசைந்தவற்றை சிறு உருண்டைகளாக உருட்டி வழக்கமாக சப்பாத்தி இடுவது போல் மெல்லியதாக திரட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கவும். (எண்ணெய் / நெய் விட கூடாது)

குறிப்புகள்:

இதே போல் நம்ம ஊரிலும் செய்வார்கள். ஆனால் இது மாலத்தீவு உணவு. நம்ம ஊரில் சுட்டு எடுக்கும் போது எண்ணெய் / நெய் விடுவாங்க, இவங்க விட மாட்டாங்க. அவ்வளவு தான் வித்தியாசம். இவர்களுக்கு இது முக்கிய உணவு.