ரொட்டி ஜாலா (இனிப்பு)
தேவையான பொருட்கள்:
1. மைதா மாவு - 1 கப்
2. தேங்காய் பால் - தேவைக்கு
3. சர்க்கரை - 5 தேக்கரண்டி
4. முட்டை - 1
5. பன்தன் இலை சாறு - 1 தேக்கரண்டி (Pandan Leaf extract)
செய்முறை:
தேங்காய் பாலுடன் பன்தன் இலை சாறு, சர்க்கரை, முட்டை கலந்து வைக்கவும்.
இதில் மைதா மாவை சிறிது சிறிதாக கொட்டி கலந்து தோசை மாவு பதத்துக்கு தயார் செய்யவும்.
இதை சாஸ் பாட்டில் அல்லது ரொட்டி ஜாலா மோள்டுகளில் ஊற்றி தோசை கல் காய்ந்ததும் வலை போல் ஊற்றவும்.
மூடி வேக விட்டு எடுக்கவும். திருப்பி போட தேவை இல்லை.
சுவையான இனிப்பு ரொட்டி ஜாலா தயார். இதை ஆப்பிள் சாஸுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குறிப்புகள்:
பன்தன் எக்ஸ்ட்ராக்ட் செய்ய: இரண்டு பன்தன் இலையை 1/2 கப் சூடான நீரில் போட்டு வைத்திருந்து சற்று கலர் மாறியதும் சிறு துண்டுகளாக நறுக்கி அதே நீரை விட்டு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பின் வடிகட்டினால் அந்த இலையில் வாசமும், கலரும் உள்ள எக்ஸ்ட்ராக்ட் கிடைக்கும். இதை பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் விரும்பிய போது பயன்படுத்தலாம்.
பன்தன் இலை இனிப்புகளுக்கு நல்ல இயற்கையான பச்சை கலரும், நல்ல வாசமும் தரும்.
ரொட்டி ஜாலா என்பது மலேசிய நாட்டு உணவு. Malaysian net crepes எனப்படும்.