ரைஸ் சாலட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த புழுங்கல் அரிசி சாதம் - ஒரு கப் வெள்ளரிப் பிஞ்சு - ஒன்று சிகப்பு குடை மிளகாய் - பாதி வேக வைத்த பச்சை பட்டாணி - 4 தேக்கரண்டி வெங்காயம் - ஒன்று கேரட் - ஒன்று டூனா டின் மீன் - ஒன்று கொண்டைக்கடலை - 5 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி மயோனைஸ் சாஸ் - 2 தேக்கரண்டி மஸ்டர்ட் சாஸ் - ஒரு தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும். சாதத்தை நன்றாக ஆறவிட்டு வைக்கவும்

கேரட்டை துருவிக் கொள்ளவும்

வெங்காயம்

குடை மிளகாய்

வெள்ளரிப் பிஞ்சு இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை பட்டாணி மற்றும் கொண்டைக்கடலையை வேக வைத்து எடுத்து வைக்கவும்.

ஒரு பெரிய கோப்பையில் சாதம்

காய்கறி

பட்டாணி

கொண்டைக் கடலை

டூனா மீன் இவை அனைத்தையும் போட்டு கிளறவும்.

தேவையான அளவு மிளகு மற்றும் உப்பை போட்டு கிளறவும்.

அடுத்ததாக மயோனைஸ்

மஸ்டர்ட் சாஸை போட்டு நன்றாக கிளறி விடவும்.

இறுதியில் தேவையான அளவு எலுமிச்சை சாறு ஊற்றவும். இப்போது உப்பு

புளிப்பு

காரம் சரிபார்த்து போதவில்லையெனில் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும்.

இதை பார்ட்டிகளுக்கு ஸ்டார்ட்டராக வைக்கலாம்

பிக்னிக்கின் போதும் எடுத்து செல்லலாம்

கலர் ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

குறிப்புகள்: